கர்த்தர் என் பட்சம் இருப்பதால்
கலங்கிடேன் காத்திடுவார் (2)
1. ஆபத்து சூறாவளி போலும்
அலையாய் சோதனை பெருகினாலும்
அசைந்திடேன் அவர் எனக்கு
அடைக்கலம் அநுகூல துணையானார்
2. சோதனை சகிப்பவன் பாக்கியவான்
ஜீவகிரீடம் பெற்றிடுவான்
விசுவாச பரிட்சை பொறுமை தரும்
நிறைவும் பூரணராய் மாற்றும்
3. அழிந்திடும் பொன் அக்கினியிலே
அழுக்கற நீங்குவதவசியமே
விலையேறப் பெற்ற என் விசுவாசம்
விளங்கிடும் மேலாய் சோதனையால்
4. அவர் தம்முன் வைத்த சந்தோஷத்தினால்
அவமானம் சிலுவை அடைந்தவர்
தாரணிக்குமேல் சோதித்திடார்
தாங்கிட பெலனும் தந்திடுவார்
HOME
More Songs